கூட்டணிக்கு தயார்! சீ.வி.விக்னேஷ்வரனுக்கு ரெலோ நேரில் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
கூட்டணிக்கு தயார்! சீ.வி.விக்னேஷ்வரனுக்கு ரெலோ நேரில் அறிவிப்பு..

சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், ரெலோ அமைப்பிற்கும்  இடையிலான சந்திப்பு  இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.

 யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன் , ஜனாதிபதியுடன் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் ஊடக பேச்சாளர் சுரேன்  என்னுடன் கலந்துரையாட வந்திருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ரெலோவுடன் உங்கள் கூட்டணிகள் அனைத்து தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன்,  அவர்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் யாழ்.மாநகர பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு