SuperTopAds

வன்னி உதைபந்தாட்டச் சமர்!! -வெற்றிக் கிண்ணத்தை தட்டி தூக்கியது பள்ளிமுனை புனித லூசியா அணி-

ஆசிரியர் - Editor II
வன்னி உதைபந்தாட்டச் சமர்!! -வெற்றிக் கிண்ணத்தை தட்டி தூக்கியது பள்ளிமுனை புனித லூசியா அணி-

வன்னி உதைபந்தாட்டச் சமரின் வெற்றிக் கிண்ணத்தை மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகம் தன்வசப்படுத்தியுள்து.

தாயக விருட்சம் சுவிஸ் மற்றும் மன்னார் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து

மன்னார் மண்ணில் நடாத்தப்பட்டஅணிக்கு 11 பேர் கொண்ட குறித்த சுற்றுப் போட்டியில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 கழகங்கள் மோதிக் கொண்டன.

இத் தொடரின் Round of - 16 போட்டியில் சஞ்சய் இன் கோலின் உதவியுடன் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகம் 1 - 0 என்ற கோல் கணக்கில் மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டு கழகம் அணியை வெற்றி பெற்றது.

காலிறுதி போட்டியில் றெபேக்சன் இன் கோலின் உதவியுடன் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகம் 1 - 0 என்ற கோல் கணக்கில் புனித சூசையப்பர் வி.க பனங்கட்டுகொட்டு மன்னார் அணியை வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

அரையிறுதி போட்டியில் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகத்தை எதிர்த்து  வலைப்பாடு மெசியா விளையாட்டு கழக அணி மோதியது. இப் போட்டிய சமநிலையில் முடிவுற்று, சமநிலை தவிர்ப்பு உதையில் 4 - 3 கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

மாபெரும் இறுதி போட்டியில் றெபேக்சன், நிலுக்சன் இன் கோலின் உதவியுடன் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா வலைப்பாடு விளையாட்டு கழகம் அணி, முல்லைத்தீவு புனித யூட் விளையாட்டு கழகம் அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வன்னியின் சாம்பியனாக மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.

இப் போட்டியில் சிறந்த வீரராக மன்னார் பள்ளிமுனை புனித லூசியா அணியின் றெபேக்சனும்,

சிறந்த கோல் காப்பாளராக பள்ளிமுனை புனித லூசியா அணியின் சதுசியனும், தொடராட்ட நாயகனாக முல்லைத்தீவு புனித யூட் அணியின் சாந்த குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இத் தொடரின் நன்நடத்தை அணியா உதய சூரியன் விளையாட்டு களக அணி தெரிவு செய்யப்பட்டது. மேலும் இத் தொடரின் மூன்றாவது இடத்தை வட்டுவாக்கால் உதய சூரியன் விளையாட்டு கழக அணியும், நான்காவது இடத்தை வலைப்பாடு மெசியா விளையாட்டுக்கழக அணியும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.