உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடவுள்ள சீ.வி.விக்னேஷ்வரன் - வி.மணிவண்ணன்! கூட்டாக அறிவிப்பு..
உள்ளுராட்சி தேர்தலில் வி.மணிவண்ணன் - சீ.வி.விக்னேஸ்வரன் இணைந்து போட்டியிட தீர்மானித்திருக்கின்றனர்.
நல்லுாரில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகத்தில் இன்று மாலை இரு தரப்புக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து தொிவித்த சீ.வி.விக்னேஸ்வரன் அதனை உறுதி செய்துள்ளார்.
இதன்போது அவர் குறிப்பிட்டதாகவது, மணிவண்ணன் அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் கலந்து கொண்டுள்ளார்.