வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண இன்று பதவியேற்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண இன்று பதவியேற்பு..!

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 

காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்.காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த மஹிந்த குணரட்ண வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு