SuperTopAds

லண்டனில் கட்டடத்துடன் மோதிய கார்!! -சம்பவ இடத்திலேயே சாரதி மரணம்-

ஆசிரியர் - Editor II
லண்டனில் கட்டடத்துடன் மோதிய கார்!! -சம்பவ இடத்திலேயே சாரதி மரணம்-

லண்டனில் கட்டடத்துடன் கார் மோதியதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு லண்டனில் தான் இச்சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது. அதன்படி South Woodfordல் உள்ள கட்டடத்துடன் கார் ஒன்று மோதியது. இதில் 40 வயதான அந்த காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அவர் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என பொலிசார் கூறியுள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் வேறு எந்த வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கவில்லை என்று தெரிவித்தனர்.