பொலிஸ் சார்ஜன்ட் தலைமையில் நடந்த வழிப்பறிக் கொள்ளை! பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட ஒருவரிடம் நடத்திய விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி...

பொலிஸ் சீருடையை பயன்படுத்தி மேலும் 4 பேருடன் இணைந்து சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் சர்ஜன்ட் உட்பட 5 பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான லொறியை நிறுத்தி சோதனை செய்வதுபோல் பாசாங்கு செய்துவிட்டு அந்த லொறியில் ஹெரோயின் கடத்தப்படுவதாக கூறி அதிலிருந்த நிறுத்தி சுமார் 30 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடுவதற்கு முயற்சித்தபோது லொறி சாரதி வீதியால் வந்தவர்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து மக்குலுகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில்,
அவர் ஹிரானேகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த கொள்ளை சம்பவத்துடன் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவருக்கும் தொடர்பிருப்பதுவும், அவரே இந்த கொள்ளை சம்பவங்களின் சூத்திரதாரி என்பதுவும் தெரியவந்துள்ளது.




