வாழ்வாதாரத்திற்காக போராடும் எங்களை சுடுதண்ணீர் ஊற்றி எழுப்பவேண்டும் என்கிறார் அமைச்சர்! நம்பி இனி பலனில்லை - கிராஞ்சி மக்கள் கவலை..

ஆசிரியர் - Editor I
வாழ்வாதாரத்திற்காக போராடும் எங்களை சுடுதண்ணீர் ஊற்றி எழுப்பவேண்டும் என்கிறார் அமைச்சர்! நம்பி இனி பலனில்லை - கிராஞ்சி மக்கள் கவலை..

பூநகரி - கிராஞ்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அட்டைப்பண்ணைகளை அகற்றுங்கள் என 100 நாட்கள் போராட்டம் நடத்தியும் அமைச்சர் எங்களைப் புறம் தள்ளிவிட்டார் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அரும்பு பெண்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைவி நிறஞ்சன் பரிமளா தெரிவித்துள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் ஊடகாமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

கிராஞ்சி இலவன்குடா பகுதியில் பல காலமாக பெண்கள் இறால் மற்றும் நண்டு, அட்டைகளை இயற்கையாகவே பிடித்து விற்பனை செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முகமாக அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளனர்.

அண்மையில் ஆளுநர் செயலகம் முன் முறையற்ற அட்டைப்பண்ணைகளை அகற்றுமாறு கோரி போராட்டம் நடத்திய பின் அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு சென்று மஜகரை வழங்கினோம்.

கடிதம் வழங்கியும் அமைச்சர் எமது கோரிக்கை தொடர்பில் எங்களுடன் பேசவில்லை மாறாக இன்னொரு கடிதத்தை தாருங்கள் பார்க்கிறேன் என கூறிச் சென்றார். நாங்கள் அமைச்சரை நம்பி இருந்தோம் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பார் என ஆனால் அது நடைபெறவில்லை.

அமைச்சர் கூறியிருந்தார் நித்திரை கொள்பவனை எழுப்பலாம் நித்திரை கொள்பவர் மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது சுடுதண்ணி ஊத்தி தான் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார். நாங்கள் நடிக்கவில்லை கிராஞ்சியில் பல குடும்பங்கள் அட்டைப் பண்ணையால் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆகவே வாழ்வாதாரம் பறிபோன நிலையில் போராட்டம் நடத்தி வரும் எங்களுக்கு இனியாவது அமைச்சர் எமக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு