SuperTopAds

மின் கட்டண அதிகரிப்பிற்கு நாளை அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்! மின்சக்தி அமைச்சு..

ஆசிரியர் - Editor I
மின் கட்டண அதிகரிப்பிற்கு நாளை அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்! மின்சக்தி அமைச்சு..

மின் கட்டண அதிகரிப்பிற்கு நாளை 9ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொிவித்திருக்கின்றது. 

எதிர்பார்த்தபடி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், நிலக்கரி மற்றும் எரிபொருள் ஆலைகளுக்கு உரிய எரிபொருள் கிடைத்தால், 

எதிர்வரும் காலங்களில் மின் வெட்டுக்கள் இன்றி மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்டண திருத்தம் தொடர்பிலான அறிவுறுத்தல்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Radio