SuperTopAds

இரு வன்முறை குழுக்களுக்கிடையில் மோதல்! ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
இரு வன்முறை குழுக்களுக்கிடையில் மோதல்! ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்..

இரு வன்முறை குழுக்களுக்கிடையில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் பேலியகொட பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களனி பெத்தியகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்து, 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio