முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வீட்டில் பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சி! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சந்தேக நபரான கொன்ஸ்டபிளுக்கு துப்பாக்கியுடன் 30 தோட்டாக்கள் வழங்கப்பட்டன.
எனினும், அதில் ஒன்றை காணவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், அந்த தோட்டாவுக்கு என்ன ஆனது என்பதை அறிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




