யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக மஞ்சுள செனரத் பதவியேற்பு!
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரைகாலமும் கடமையாற்றிய விஜித குணரத்ண ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற பிரவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த மஞ்சுள செனரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.