SuperTopAds

தனியார் வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் நடாத்த தடை! பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
தனியார் வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் நடாத்த தடை! பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..

க.பொ.த உயர்தர பரீட்சை நெருங்கும் நிலையில் இம்மாதம் 17ம் திகதி நள்ளிரவுக்கு பின் தனியார் வகுப்புக்கள் மற்றும் கருந்தரங்குகள், செயலமர்வுகள் நடாத்த தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்பிரகாரம், பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், தனியார் வகுப்புகள், மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், விநியோகித்தல், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் மூலம் விளம்பரப்படுத்துதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தடையுத்தரவை மீறி செயற்பட்டால் அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறிந்தால் பொலிஸ் தலைமையகம் எண் 0112421111, பொலிஸ் அவசர எண் 119, பரீட்சைகள் திணைக்களத்தின் தொடர்பு எண் 1911 அல்லது பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு செய்யும் கிளை எண்கள் 0112784208 / 0112784537 

என்ற இலக்கங்களுக்கோ தகவல் வழங்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 17 ஆம் திகதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio