கிளிநொச்சியில் பணியாற்றும் இராணுவ கோப்ரல் தர அதிகாரி உழவு இயந்திரத்தை திருடி சிக்கினார்!

கிளிநொச்சியில் பணியாற்றும் கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் உழவு இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுமுறையில் வீடு சென்றிருந்த குறித்த இராணுவ அதிகாரி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லக்கல பொலிஸாரினால் கைது செய்ய்பட்டுள்ளார்.
இவர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள படைமுகாம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.




