தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம் இறுதியானதல்ல! பங்காளி கட்சிகளுடன் பேசியே தீர்மானம் - மாவை சேனாதிராஜா...

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம் இறுதியானதல்ல! பங்காளி கட்சிகளுடன் பேசியே தீர்மானம் - மாவை சேனாதிராஜா...

உள்ளுராட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இறுதியானதல்ல. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இறுதி முடிவா என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்கள்.

இது தமிழரசு கட்சியின் உடைய விருப்பமாக மத்திய குழுவில் முன்வைக்கப்பட்ட  நிலையில் எதிர்வரும் வாரங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகள் உடைய தலைவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளோம்.

ஆகவே கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின்  பின்னர் தீர்க்கமான இறுதி முடிவை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு