SuperTopAds

யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் இடையில் படகுசேவையை தொடங்குவதற்காக சுங்க திணைக்கள கட்டுமானங்களை அமைக்கும் பணி ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் இடையில் படகுசேவையை தொடங்குவதற்காக சுங்க திணைக்கள கட்டுமானங்களை அமைக்கும் பணி ஆரம்பம்!

யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் இடையே கப்பல்சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் கட்டுமான பணிகளை மிக விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறினார். 

வடமாகாண ஆளுநர் தலைமயைில் சிவில் விமான சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. 

இந்த சந்திப்பின் பின்னர் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் ஆளுநர் தொிவிக்கையில், 

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு மட்டத்தில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் 

மற்றும் சுங்கத் திணைகள் அதிகாரிகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்பு என்னோடு கலந்துரையாடினர். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளில் 

வடமாகாணசபை எவ்வாறான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடினோம். 

இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவு படுத்தினர்.

முதற்கட்டமாக இறங்குதுறை மற்றும் சுங்கத்திணைக்கள கட்டுமானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்ததுடன் எதிர்வரும் மாதங்களில் குறித்த திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

என அவர் மேலும் தெரிவித்தார்.