தமிழுக்கு முதல் இடம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஆசிரியர் - Editor II
தமிழுக்கு முதல் இடம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 56 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது பிறந்தநாளான இன்று வெள்ளிக்கிழமை 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்பார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு