SuperTopAds

நேற்று பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணிவரை 149 பாடசாலைகளின் சுற்றாடலில் நடந்த சுற்றிவளைப்பு! 55 போதை வியாபாரிகள் கைது, பொலிஸார் அதிர்ச்சி தகவல்...

ஆசிரியர் - Editor I
நேற்று பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணிவரை 149 பாடசாலைகளின் சுற்றாடலில் நடந்த சுற்றிவளைப்பு! 55 போதை வியாபாரிகள் கைது, பொலிஸார் அதிர்ச்சி தகவல்...

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை இலக்குவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 55 பேர் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளனர். 

நேற்று (05) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது போதைப்பொருள் 

மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 

20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Radio