இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இம் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனாலும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை. ஜூலையில் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் புதிய வருடத்தில் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.




