வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடைய உத்தியோகபூர்வ வாகனம் வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளருக்கு! உள் குத்து உண்டு...

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடைய உத்தியோகபூர்வ வாகனம் வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளருக்கு! உள் குத்து உண்டு...

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனம் வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தனக்கு வழங்கப்பட்ட அரச வாகனத்தை பயன்படுத்தாமல் தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளார். 

இந்த விடயம் மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கும் தொியப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் தனது தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்துவதாயின் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 300 லீற்றர் டீசல் வழங்கப்படும். 

இதனை கருத்தில் கொண்டு தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் செயலாளர் முடிவெடுத்த நிலையில், 

அவரின் உத்தியோகபூர்வ வாகனம் பிரதம செயலாளர் அலுவலகத்தினால் கையேற்கப்பட்டு வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு