யாழ்.நாவற்குழியில் இன்று காலை மக்கள் போராட்டம்..!
யாழ்.நாவற்குழியில் இன்று வியாழக்கிழமை(05) காலை 9.30 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சந்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.