யாழ்.மாநகரசபை விவகாரம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல்! ஈ.பி.டி.பி - கூட்டமைப்பு புறக்கணிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை விவகாரம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல்! ஈ.பி.டி.பி - கூட்டமைப்பு புறக்கணிப்பு..

யாழ்.மாநகரசபை விவகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

ஆளுநரின் செயலாளர், மற்றும் உள்ளூர் ஆட்சி ஆணையாளர் ஆகியோரிடம் தமது நிலைப்பாடு தொடர்பாக உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர். 

யாழ்.மாநகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் புதிய மாநகர முதல்வர் தெரிவு செய்யப்படகூடாது என கூறினர். 

ஆளுநர் விரும்பினால் முன்னாள் முதல்வர் மணிவண்ணனின் இராஜினாமா கடிதத்தை நிராகரித்தால் சபையில் பாதீட்டை சமர்ப்பிப்பதற்கு ஆலோசிக்க முடியும். 

இரண்டும் இல்லையென்றால் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநகர சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது ஆளுநரின் அழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் தமது கோரிக்கை கடிதத்தை 

ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்த யாழ்.மாநகரசபை முன்னணி உறுப்பினர்கள் மாநகர முதல்வர் தெரிவு சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் நாடவுள்ளதாக தெரிவித்தனர். 

குறித்த கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி யாழ்.மாநகரசபை உறுப்பினர் குயிலன் முதல்வர் விவகாரம் தொடர்பில் இவ்வாறு உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள் கேட்க வேண்டிய தேவை இல்லை.

உள்ளூராட்சி சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டம் முதல்வர் ஒருவர் இராஜினாமா செய்தால் என்ன செய்ய வேண்டும் என கூறுகிறதோ அதை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு தரப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் கடிதம் ஒன்றை ஆளுநரின் செயலாளருக்கு வழங்கியதாகவும் 

அதைத்தான் கேள்வி கேட்ட இடத்தில் தாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எனப் பதில் அளித்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு