வெளியான நிமிடத்தில் இருந்தே You Tube இல் சக்கைப் போடு போடும் வாரிசு டிரைலர்

ஆசிரியர் - Editor II
வெளியான நிமிடத்தில் இருந்தே You Tube இல் சக்கைப் போடு போடும் வாரிசு டிரைலர்

தளபதி விஜயின் வாரிசு படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி You Tube இல் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 28 செகண்டுக்கான டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 

தற்போது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் விஜய்யின் வாரிசு பட டிரைலர் பக்கம் திரும்பி உள்ளது. எனக்கு போட்டி நான் தான் என ஆடியோ லாஞ்சில் விஜய் பேசியிருந்தார். அதன்படியே பீஸ்ட் பட சாதனையை அவரின் வாரிசு படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு