இரும்பு குழாய் ஒன்றை துாக்கிச் சென்ற 28 வயதான இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
இரும்பு குழாய் ஒன்றை துாக்கிச் சென்றபோது குறித்த குழாயின் ஒரு பகுதி உயர் அழுத்த மின் கம்பியை தொட்டதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள கட்டிடத்தில் தொழிற் பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விமுக்தி தில்ஷான் (வயது28) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.