3 மாத பெண் குழந்தையை 3 ஆவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த கொடூர தாய்

ஆசிரியர் - Editor II
3 மாத பெண் குழந்தையை 3 ஆவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த கொடூர தாய்

தனக்கு பிறந்த மூன்று மாத பெண் குழந்தையை தாயே வைத்தியசாலையின் 3 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையின் 3 ஆவது மாடியில் இருந்து தனது 3 மாத மகளை தூக்கி எறிந்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயது பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அசர்வா பகுதியில் உள்ள வைத்தியசாலையில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் தாலுகாவைச் சேர்ந்த பர்ஸானா பானு மாலேக், தனது குழந்தை அம்ரின் பானு பிறப்பிலிருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாலும், மிகவும் வேதனையுடன் இருப்பதைக் கண்டு தாங்க முடியவில்லை என்பதாலும் தான் இப்படியொரு முடிவை எடுத்ததாக பர்ஸானா பானு கூறியுள்ளார்.

இருப்பினும், குழந்தை வைத்தியசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறி முதலில் பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்றார். ஆனால் சிவில் வைத்தியசாலையின் கண்காணிப்பு கமெறா காட்சிகள் மூலம் உண்மை கண்டறியப்பட்டது.

கண்காணிப்பு கமெறா காட்சிகளில், அவர் தனது மகளை தூக்கிக்கொண்டு கேலரியை நோக்கி செல்வதையும், பின்னர் வெறுங்கையுடன் திரும்பி வருவதையும் காணமுடிந்தது.

மேலும், குழந்தை அம்ரின் உடலை வைத்தியசாலை ஊழியர்கள் தரை தளத்தில் கண்டனர்.

இதையடுத்து, அந்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு