SuperTopAds

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படவுள்ள மாற்றம், 24 புள்ளியிடல் முறை மார் 31க்கு முன் அமுல்..!

ஆசிரியர் - Editor I
சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படவுள்ள மாற்றம், 24 புள்ளியிடல் முறை மார் 31க்கு முன் அமுல்..!

வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் இவ்வாண்டு தொடக்கம் கி.யூ.ஆர் குறியீடு உள்ளடக்கப்பட்ட புதிய சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும். என மோட்டார் போக்குவரத்து  ஆணையாளர் -அபிவிருத்தி குசலானி டி சில்வா தெரிவித்தார்.

தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன. அந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் போது, புதிய கியூ.ஆர். குறியீடு முத்திரையிடப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, வாகன சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த தெரிவித்திருந்தார்.

இதன்படி, போக்குவரத்து விதி மீறல்களை புரிகின்ற வாகன சாரதிகள் 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும். அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.