இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! சான்றுப் பொருட்கள் அரசுடமை...

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! சான்றுப் பொருட்கள் அரசுடமை...

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்கள் 12 பேருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சாதாரண சிறைத்தண்டணை வழங்கிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

டிசம்பர் 21ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர்.

12 இந்திய மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததுடன்படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு