தனது இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்திய தாய்! 5 வயது குழந்தை உயிரிழப்பு, தாய் உயிருக்கு போராட்டம்...
தாய் கொடுத்த விஷத்தை அருந்திய 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர்.
கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனே உயரிழந்துள்ளான்.
கம்பஹா, நால்ல - லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய தாயொருவர் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையில்
தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாயினால் விஷமூட்டப்பட்ட, எட்டு வயதான மற்றைய பிள்ளை
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.