யாழ்ப்பாணத்திலிருந்து போதைப் பொருள் கடத்தல்! பொலிஸ் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து போதைப் பொருள் கடத்தல்! பொலிஸ் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது...

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்தப்பட்டு வீடொன்றின் பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தொிவித்துள்ளனர். 

தம்புள்ளை பிரதேசத்தில் சில காலமாக பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக பொலிஸ் விசேட பணியக குழுவிற்கு தகவல் கிடைத்ததையடுத்து, தம்புள்ளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே.அல்லெபொல தலைமையில் 

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு