24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்!! -அசத்தும் அஜித்தின் துணிவு பட டிரைலர்-

ஆசிரியர் - Editor II
24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்!! -அசத்தும் அஜித்தின் துணிவு பட டிரைலர்-

எச்.வினோத் இயக்கத்தில் அல்டிமெட் ஸ்டார் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

அண்மையில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு