மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்று கடலில் நீராடிய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
கடலில் நீராடச் சென்றிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த 17 வயதான இரு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர் நீராடச் சென்றதாகவும் அதில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்வதாக கூறி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.