மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் புதியபீடாதிபதியாக த.கணேசரத்னம்
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் புதியபீடாதிபதியாக த.கணேசரத்னம்
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வு பெற்றுச் செல்லும் பீடாதிபதி எம்.ஐ.எம் நவாஸை வழியனுப்புதல் மற்றும் புதிய பீடாதிபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற த.கணேசரத்னத்தை வரவேற்றல் ஆகிய நிகழ்வு சனிக்கிழமை(31) கல்லூரியில் இடம்பெற்றது.
காத்தான்குடி வரலாற்றில் இன்று வரை ஒரே ஒரு இலங்கை கல்வியாளர் சேவையின் தரம் 1இல் பதவி வகித்து வந்த நவாஸ் சேர் அவர்கள் 1986 ஆம் ஆண்டு பட்டதாரி விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்று உயர் தர மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்த போது, 1992 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியின் உருவாக்கத்தின் போதே விரிவுரையாளராக நியமனம் பெற்றார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அக்கல்லூரியிலேயே பீடாதிபதியாக பதவி உயர்வு பெற்ற அவர் அக்கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். இவரின் காலத்தில் அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி பல தேசிய மட்ட விருதுகளை வென்றது.
2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியாக பதவி உயர்வு பெற்று வந்த நவாஸ் சேர் அவர்கள், பல்லின சமூகத்தினராலும் கௌரவமாக மதிக்கப்பட்டு வந்த கல்விமானாகும். மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி, இவரது நிர்வாக காலத்தில் மாத்திரமே எந்த வித சங்கடதிற்கும் உட்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்