காணி தகராறு முற்றியதில் பெண் ஒருவரை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கும்பல்..!
காணி தகராறு முற்றியதில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மஹவிலாச்சி - ஹெலம்பகஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
76 வயதுடைய பெண்ணே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நேற்று 31 ஆம் திகதி அநுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து
ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மஹவிலாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.