சட்டவாட்சிக்கான எங்களின் உறுதி மொழியை நிலைநிறுத்துவோம்.. வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் தெரிவிப்பு.

ஆசிரியர் - Editor I
சட்டவாட்சிக்கான எங்களின் உறுதி மொழியை நிலைநிறுத்துவோம்.. வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் தெரிவிப்பு.

சட்டவாட்சிக்கான எங்கள் உறுதி மொழியை புதுப்பித்து நிலை நிறுத்துவோம் என வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மக்களின் வாழ்வில் அமைதியும் செழிப்பையும் போட்டு வைக்கும் ஆண்டாக மலரும் புத்தாண்டில் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவிக்கின்றேன்.

வடக்கு ஏழை மக்களின் காணி, வறுமையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தல், சிறப்பான சுகாதார பராமரிப்பு கல்விக்கான சேவைகள் உற்பட உட்கட்டமைப்பு வசதிகள் அனைவருக்கும் சிறந்த முறையில் கிடைக்க வேண்டும். 

மாகாண நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை வழங்க அவர்களின் வாசலுக்கு கொண்டு செல்லுதல், காணி பிணக்குகளை தீர்த்தல், 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிரேஷ்ட பிரஐகளை ஆதரித்துச் செயற்படும் சிந்தனைகளை மேலும் வளர்க்க வேண்டும். 

அகவை மலரும் புத்தாண்டில் மக்களுக்கான சேவையை வழங்குவதற்காக  சட்டவாட்சிக்கான எங்களின் உறுதிமொழியினை புதுப்பித்து நிலைநிறுத்துவோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு