SuperTopAds

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்று தொடக்கம் முற்பணம் பெறலாம்...

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்று தொடக்கம் முற்பணம் பெறலாம்...

அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு 4 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத விசேட முற்பணத்தை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதற்கான சுற்று நிரூபம் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னேவினால் வெள்ளிக்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிரூபம் அமைச்சுக்களின் செயலாளர்கள் , மாகாண பிரதம செயலாளர்கள் 

மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்முற்பணக் கொடுப்பனவை இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்றும் , 

பெப்ரவரி 28 ஆம் திகதியின் பின்னர் இதனை செலுத்த முடியாது என்றும் குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இதனை இவ்வாண்டுக்குள் அறிவிட்டு நிறைவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.