திருடர்களுக்கு பயந்து வங்கிப் பெட்டகத்தில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற 44 லட்சம் பெறுமதியான நகைகளை வீதியில் வைத்து பறித்து சென்ற திருடன்..
திருடர்களுக்கு பயந்து வங்கிப் பெட்டகத்தில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட நகைகள் வீதியில் வைத்து பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருப்பது பாதுகாப்பில்லை என்பதால் வங்கி பெட்டகத்தில் வைப்பதற்காக,
சுமார் 44 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை பெண் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது அவரை பின்தொடர்ந்த நபரொருவர்,
அந்தப் பெண் சத்தம் போடாத வகையில், திடீரென ஒரு கையால் அவரது வாயை மூடி, தங்க நகைகள் அடங்கிய கைப்பையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கணேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், கடவத்தை பகுதியில் உள்ள வங்கியொன்றின் பெட்டகத்தை முன்பதிவு செய்து,
அந்த பெட்டகத்தில் தங்க நகைகளை வைப்பதற்காக அவர் சென்றபோதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.