இந்தியா பயணமாகிறார் க.வி.விக்னேஸ்வரன்!

ஆசிரியர் - Editor I
இந்தியா பயணமாகிறார் க.வி.விக்னேஸ்வரன்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு பேரவையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். 

எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை குறித்த மாநாடு இடம்பெறவுள்ள நிலையில் உலகெங்கிலும் பரந்து வாழும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த மாநாட்டில் உலகத் தமிழர் பொருளாதாரம் என்னும் தொனிப் பொருளில் விக்னேஸ்வரன் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு