12 வயதான சொந்த மகள் மீது பாலியல் துன்புறுத்தல், 12 கிலோ மீற்றர் நடந்து சென்று பொலிஸாரிடம் முறையிட்ட சிறுமி! முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..
12 வயதான தனது சொந்த மகளை 2 வருடங்களுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாத மகள் 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று
கல்னேவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (26) இது தொடர்பில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்திலிருந்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்னேவ பிரதேசத்தில் குடிபுகுந்தவர் என விசாரணைகளில் தொியவந்துள்ளது.
35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என்பதும் விசாரணைகளில் அம்பலமானது. சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.