யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸனுக்கு இடமாற்றம்!
யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சு ஒன்றின் செயலாளராக அவர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும்,
அவருடைய இடத்திற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமத ரூபாவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலராக வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.