நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் ஜனாதிபதியின் முன்னாள் அரசியல் ஆலோசகர்! இந்த மனநோய்க்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன? ஹிருணிகா ஆவேசம்..
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷீ மாரசிங்க உடன் அமுலுக்குவரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் பேராசிரியர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணியான நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிறேமச்சந்தி அதற்கான புகைப்படங்களை காண்பித்து அதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நேற்று கொழும்பில் நேற்று ஊடகங்களை சந்தித்த ஹிருணிகா பிறேமச்சந்திர கூறுகையில்,
ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் தொடர்பாக இப்படி ஒரு ஊடக சந்திப்பில் பேசும் நிலையேற்படும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இப்படியான ஒரு கதையை உலகில் எங்கேயும் கேட்டிருக்க முடியாது. இதனை எங்கிருந்து தொடங்குவது என்பதும் எனக்கு தொியவில்லை.
பேராசிரியர் ஆஷி மாரசிங்க செல்ல பிராணியான சிறிய நாய் குட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஊடகங்களுக்கு தருகிறேன் என கூறியதுடன், அவரே ஒரு புகைப்படத்தை துாக்கி காண்பித்தார்.
மேலும் தமது பாலியல் தேவைகளை விலங்குகள் மூலம் தீர்த்துக் கொள்வது ஒரு மனநோய் ஆகும். அவ்வாறான ஒரு நடவடிக்கை எமது நாட்டு சட்டத்தின்படி 20 வருடங்கள் சிறைத்தண்டணை வழங்ககூடிய குற்றமும் ஆகும். எனவே இந்த செயலுக்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.