15 வயது சிறுமிக்கு 24 வயதான குடும்பஸ்த்தருடன் காதல்! வற்புறுத்தி மதுபானம் பருக்கி நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்...

15 வயதான சிறுமிக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இறக்குவானை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 15 வயதான சிறுமியை ஆட்டோவில் பாழடைந்த வீடொன்றுக்குள் கொண்டு சென்று பலவந்தமாக மதுபானம் பருக்கப்பட்டிருக்கின்றது.
பின்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தை தனது நண்பர்கள் இருவரை அழைத்து அவர்களும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சம்வம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 24 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் கூறுகையில், குறித்த சிறுமி 24 வயதான சந்தேகநபரான குடும்பஸ்த்தரை காதலித்ததாகவும்,
அதனால் பாழடைந்த வீட்டிற்கு சென்றதாகவும் கூறியுள்ளதுடன், முதலில் மதுபானத்தை காதலன் வற்புறுத்தி பருக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் அவருடைய நண்பர்கள் இருவர் கலந்து கொண்டு அவர்களும் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
எனவும் கூறியுள்ளதுடன், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.




