எல்.பி.எல் கிண்ணத்தை 3 ஆவது முறையாக தனாக்கிய ஜப்னா கிங்ஸ்

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் கிண்ணத்தை 3 ஆவது முறையாக தனாக்கிய ஜப்னா கிங்ஸ்

எல்.பி.எல் ரி-20 மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எல்.பி.எல் இருதிப் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணியும், அஞ்சலோ மத்தியுஸ் தலைமையிலான கொழும்பு ஸ்ரார் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார் அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் நிசான் மதுசங்க ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர். இதன் பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டினேஸ் சந்திமால் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவி போபாரா 33 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்றர்.


இதன்படி கொழும்பு ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தன்படி ஜப்னா கிங்ஸ் அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொழும்பு ஸ்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டக்காரர் அனைவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மைதானத்தில் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய அவிஸ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

இறுதிவரை பரபரப்புக்கு குறைவில்லாமல் நடந்த இல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 19.2 பந்துபரிமாற்றங்களில் வெற்றி இலக்கை கடந்து கிண்ணத்தை தனதாக்கியது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு