சந்திமால், போபாரா அசத்தல் துடுப்பாட்டம்!! -ஜப்னா கிங்ஸ் அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த கொழும்பு ஸ்டார்-

ஆசிரியர் - Editor II
சந்திமால், போபாரா அசத்தல் துடுப்பாட்டம்!! -ஜப்னா கிங்ஸ் அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த கொழும்பு ஸ்டார்-

எல்.பி.எல் ரி-20 மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிப்போட்டிக்கான நிகழ்வுகள் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் எல்.பி.எல் இருதிப் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணியும், அஞ்சலோ மத்தியுஸ் தலைமையிலான கொழும்பு ஸ்ரார் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார் அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் நிசான் மதுசங்க ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர். இதன் பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டினேஸ் சந்திமால் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவி போபாரா 33 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்றர்.

இதன்படி கொழும்பு ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தன்படி ஜப்னா கிங்ஸ் அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொழும்பு ஸ்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு