ஒஸ்கரில் தெரிவான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல்

ஆசிரியர் - Editor II
ஒஸ்கரில் தெரிவான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல்

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்'  படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். 

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகளுக்கான தெரிவு பட்டியலில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பிடித்துள்ளது. 

ஆர்.ஆர்.ஆர். சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு