அர்ஜென்டினா பணத்தாளில் மெஸ்சியின் புகைப்படம்

ஆசிரியர் - Editor II
அர்ஜென்டினா பணத்தாளில் மெஸ்சியின் புகைப்படம்

36 வருடங்களுக்கு பின் உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தலைவர் மெஸ்சியின் புகைப்படத்தை, அந்நாட்டு பணத்தாளில் அச்சிடுவதற்கு ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அர்ஜென்டினாவின் கரன்சி, 'அர்ஜென்டின் பெசோ' என அழைக்கப்படுகிறது. உலக கோப்பையை வெற்றி கொண்ட உற்சாகத்தில் அர்ஜென்டினா உள்ளது. கோப்பையுடன் தாயகம் திரும்பிய அணித்தலைவர் மெஸ்சி, ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில், உலக கோப்பையை பெற்று தந்த அணித்தலைவர் மெஸ்சியை கௌரவிக்கும் வகையில், அர்ஜென்டினா பணத்தாளில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், அர்ஜென்டினா பணமதிப்பின்படி ஆயிரம் நோட்டு கரன்சியில் மெஸ்சியின் படத்துடன், அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியை கௌரவிக்க பணத்தாளில் அவரது பெயரை குறிக்கும்  வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு