SuperTopAds

9 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக பெற்றோர் முறைப்பாடு! மின்சாரசபை ஊழியர் மீது சந்தேகம், கைது செய்ய நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
9 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக பெற்றோர் முறைப்பாடு! மின்சாரசபை ஊழியர் மீது சந்தேகம், கைது செய்ய நடவடிக்கை..

9 வயதான சிறுவனை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம எப்பாவல - கிரலோகம பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். 

சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் 45 வயதுடைய மின்சார ஊழியர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவரை கைது செய்யவுள்ளதாகவம் பொலிஸார் கூறினர். 

 P.K தெனெத் கௌரவ பிரேமசுந்தர என்ற சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள மின்சார ஊழியர் ஒருவருடன் சிறுவன் நட்பாக இருந்ததாகவும், சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர் சிறுவனை கடத்தியிருக்கலாம் என 

சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் எப்பாவல பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு 8.30 மணிக்குப் பின்னர் சிறுவன் வீட்டில் இல்லையெனவும் தேடிப்பார்த்த போதும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவனை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரிடம் சிறுவன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட சிறுவனுடன் நாவுல பிரதேசத்தில் உள்ள தனது சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற குறித்த மின்சார ஊழியர் 

நேற்று (20ஆம் திகதி) அதிகாலை சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.