தனக்கு சட்டம் தொியும் என கூறிய இராணுவ கோப்ரல் உட்பட 4 பேர் கைது!
போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் தர அதிகாரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்றெ்றுள்ளது. “நான் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமை புரிகிறேன்.
எனக்குச் சட்டங்கள் தெரியும்“ என அவர்களின் ஒருவர் பொலிஸாரிடம் கூறி கடமைக்கு இடையூறு விளைத்துள்ளார் என பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.