5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
இன்று தொடக்கம் அமுலுக்கு வரும்வகையில் மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொஷ நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை திருத்தம் இன்று (21) முதல் அமுலுக்கு வரும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்.
அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.இதேவேளை ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்.
அதன் புதிய விலை 378 ரூபாவாகும்.425 கிராம் உள்ளுர் டின் மீன்களின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 480 ரூபாவாகும்.
ஒரு கிலோ மிளகாயின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1780 ரூபாவாக பதிவு செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.