அந்த நபரால் உடல் அளவில் காயமடைந்தேன்!! -சினிமா பிரபலம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்திய ஆண்ட்ரியா-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, "சினிமா பிரபலம் ஒருவரால் மனதளவிலும், உடல் அளவிலும் காயப்பட்டேன்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா பிரபலமடைந்தார்.
இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை, கமலின் விஸ்வரூபம் 1 மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ஆண்ட்ரியா, கொரோனா தொடங்கியதில் இருந்து திடீர் என இரண்டு வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில கவிதை எழுதி வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் ஆண்ட்ரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தான் உறவில் இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட வலிகளின் காரணமாக சிறிது காலம் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தேன் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
அந்த பிரபலம் யார் என்று பெயரை குறிப்பிடாத ஆண்ட்ரியா, அந்த நபர் தன்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார், இதனால் நான் அதீத மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வழிகளில் இருந்து வெளியே வரவே கவிதைகள் எழுதினேன், ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொண்டேன் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.