SuperTopAds

தளபதியின் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு!!

ஆசிரியர் - Editor II
தளபதியின் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் 3 ஆவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி சோல் ஆப் வாரிசு (Soul of Varisu) என்ற பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.