பேருந்தில் ஏற முயற்சித்த பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓடியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார்!
பேருந்தில் ஏற முயற்சித்த பெண் ஒருவரின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓடிய நபரை பொலிஸாரும், பொதுமக்களும் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம்
பாணந்துறை - பொக்குனுவிட்ட சந்தியில் நேற்று இடம்பெற்றள்ளது. காலை 7.45 மணியளவில் ஹொரணை பகுதியிலிருந்து எம்பிலிப்பிட்டிய பகுதிக்குச் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் ஒருவர் எம்பிலிப்பிட்டிய பஸ் வந்தவுடன் பஸ்ஸில் ஏற முயன்றுள்ளார்.
இதன்போது அவரின் கைப்பையை நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார்.இது தொடர்பில் பஸ்ஸிலிருந்த பயணிகள் உடனடியாக பொக்குனுவிட்ட சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பிரிவின் சார்ஜன்ட் ரொஷான் பெரேரா மற்றும் சார்ஜன்ட் டபிள்யூ.டி.துஷாரா ஆகியோருக்கு தகவல் வழங்கியதையடுத்து,
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபர் வயல் ஊடாக தப்பிச் செல்வதை கண்டுள்ளனர். இதனையடுத்து வயல்வெளிகள் ஊடாக துரத்திச் சென்று பிரதேசவாசிகளின் உதவியுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் புளத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் போதைக்கு அடிமையானவர் என்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.